/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைதி கூட்டத்தை புறக்கணித்த வியாபாரிகள்
/
அமைதி கூட்டத்தை புறக்கணித்த வியாபாரிகள்
ADDED : ஜன 20, 2024 06:14 AM
விருத்தாசலம் : அமைதி கூட்டத்தை வியாபாரிகள் புறக்கணித்ததால், கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.
விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையில் உள்ள பழைய காய்கறி மார்க்கெட் கட்டடங்களை இடித்து அகற்றி, புதியதாக ரூ.5.41 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வளாகம் கட்டும் பணி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
இந்நிலையில், பழைய காய்கறி மார்க்கெட்டில் இயங்கி வரும் கடைகளை அகற்றி, தற்காலிகமாக மாற்று இடத்தில் அமைக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், காய்கறி கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதால், கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுசம்பந்தமாக, நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வியாபாரிகளுடன் அமைதி கூட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று மாலை ஆர்.டி.ஓ., சையத் மெக்மூத் தலைமையில் அமைதி கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்திற்கு, அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால், வியாபாரிகள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதனால், அமைதி கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கும் என ஆர்.டி.ஓ., சையத் மெக்மூத் உத்தரவிட்டார்.