/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் மேலவீதியில் போக்குவரத்து நெருக்கடி; 15 நாட்களுக்கு ஒரு முறை வாகன நிறுத்தம் மாற்றம்

ADDED : ஜூன் 19, 2025 07:19 AM
சிதம்பரம் : சிதம்பரம் மேல வீதியில், போக்குவரத்து போலீசார் நேறறு முதல் புதிய நடைமுறையை அமுல்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தில், நாளுக்கு நாள் அதிகரித்துள்ள மக்கள் தொகை காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், சிதம்பரம் டி.எஸ்பி., யாக லாமேக் பொறுபபேற்ற பின்பு, போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை செய்து வருகின்றார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முதல், வரும் 30ம் தேதி வரை சாலையின் மேற்கு புறம் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும், சாலையின் கிழக்கு புறம் இருசக்கர வாகனங்களும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 1 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை இந்த முறை மாற்றப்பட்டு, சாலையில் கிழக்கு பக்கம் கார்களும், மேற்கு பக்கம் இரு சக்கர வாகனங்களும் மாற்றி நிறுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த நடைமுறை மாற்றப்படும் என தெரிவித்துள்ளனர். அதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் கலையரசன் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரவை மீறும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்