/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவில் சன்னதி வீதியில் வாகன நெரிசல்
/
விருத்தகிரீஸ்வரர் கோவில் சன்னதி வீதியில் வாகன நெரிசல்
விருத்தகிரீஸ்வரர் கோவில் சன்னதி வீதியில் வாகன நெரிசல்
விருத்தகிரீஸ்வரர் கோவில் சன்னதி வீதியில் வாகன நெரிசல்
ADDED : ஜன 20, 2025 11:59 PM

விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் வியாழன், சனிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசலில் ஆங்காங்கே தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அப்போது, வேப்பூர் மார்க்கத்தில் இருந்து கோவிலை சுற்றி வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி, பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், கோவிலுக்கு எதிரே நந்தவனத்தில் பார்க்கிங் அமைத்தும், வாகன ஓட்டிகள் சாலையில் நிறுத்துவதை தடுக்க முடியவில்லை. இதனால் தினசரி காலை முதல் இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை முடியும் வரை நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வர முடியாமல் தவிக்கின்றனர். எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசல் அமைந்துள்ள சன்னதி வீதியில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

