/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் - மீன்சுருட்டி இடையே 4 வழிசாலையில் போக்குவரத்து துவக்கம்
/
சிதம்பரம் - மீன்சுருட்டி இடையே 4 வழிசாலையில் போக்குவரத்து துவக்கம்
சிதம்பரம் - மீன்சுருட்டி இடையே 4 வழிசாலையில் போக்குவரத்து துவக்கம்
சிதம்பரம் - மீன்சுருட்டி இடையே 4 வழிசாலையில் போக்குவரத்து துவக்கம்
ADDED : ஜன 05, 2024 06:24 AM

காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம்- மீன்சுருட்டி இடையிலான 4 வழிச்சாலை பணி முடிக்கப்பட்டு, போக்குவரத்து துவங்கியது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து திருச்சி வரை, நான்கு வழிச்சாலை அமைக்க, 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சிதம்பரம்- மீன்சுருட்டி, மீன்சுருட்டி-கல்லகம், கல்லகம்- திருச்சி ஆகிய 3 பிரிவாக, கடந்த 2021 இறுதியில் பணி துவங்கியது. 2023ல் பணியை முடித்து, சாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.
இதில் திருச்சியில் இருந்து, லால்குடி, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி வழியாக சிதம்பரம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைகிறது.
மீன்சுருட்டியில் இருந்து திருச்சி வரை, இரு பிரிவு பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்டு, 2023ம் ஆண்டு துவக்கத்தில் போக்குவரத்து துவங்கியது.
சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரையிலான சாலை பகுதியில் முற்றிலும் விவசாயம் நிலங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பகுதிகளாக இருந்ததால், நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் பணி தாமதமாக துவங்கி, மந்தமாக நடந்து வந்தது.
தற்போது பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, 2024 புத்தாண்டு தினத்தில் இருந்து, சிதம்பரம்- மீன்சுருட்டி வரையிலான சாலையில் போக்குவரத்து துவங்கப்பட்டது. ரூ. 553 கோடி செலவில், 31 கி.மீ. துாரமுள்ள இச்சாலை பயன்பாட்டிற்கு வந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி தஞ்சாவூர் சாலைக்கு செல்ல குமராட்சி, காட்டுமன்னார்கோவில் வழியாக சுமார் 1:30 மணி நேரம் ஆகும். தற்போது, 31 கி.மீ., துாரமுள்ள இச்சாலை வழியாக, 45 நிமிடங்களுக்குள் சென்றுவிட முடியும் .இதனால், விபத்துக்களும் பெருமளவில் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.