ADDED : பிப் 13, 2026 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில்நிலையத்தில் மறியல் போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யூ.,மாவட்டசெயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
போராட்டத்தில் விவசாய சங்க மாநில துணைத்தலைவர் மாதவன் மற்றும் ஐ.என்.டி.யூ.சி., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., யூ.டி.யூ.சி., எல்.எல்.எப்., உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 134 பேரை போலீசார் கைது செய்தனர்.

