/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : நவ 12, 2025 10:28 PM

குறிஞ்சிப்பாடி: ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலெக்டர் பங்கேற்றார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தினை இணையதளத்தில் பதிவேற்றல் தொடர்பான பயிற்சி வகுப்பு, நேற்று குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கினார். தனித்துணை கலெக்டர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.
இந்த வகுப்பில், வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்வது, அதில் உள்ள சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அளிப்பது, படிவத்தினை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன. கலால் உதவி கமிஷனர் சண்முகவள்ளி உட்பட பலர் உடனிருந்தனர்.

