ADDED : மார் 29, 2026 05:15 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உள்ள ஜெயப்பிரியா சி.பி.எஸ்.சி., பள்ளியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 1,18,319 ஆண்கள்; 1,19,495 பெண்கள், மூன்றாம் பாலினம் 22 உட்பட 2,37,836 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுபோட வசதியாக 317 ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், விருத்தாசலம் ஜெயப்பிரியா சி.பி.எஸ்.சி., பள்ளியில், ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில், விருத்தாசலம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா தலைமை தாங்கி, ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
மேலும், ஓட்டுப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினார். இதில், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ், தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
