UPDATED : அக் 18, 2026 04:08 PM
ADDED : அக் 18, 2026 04:05 PM
புதுச்சத்திரம்: ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள், வெட்டிவேர் பயிரிடும் நிலத்தில் களப்பயிற்சி மேற்கொண்டனர்.
வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறுவது வழக்கம். அதையொட்டி ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லூரி மாணவிகள் ஆதிவராக நல்லுார் கிராமத்தில் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில், வெட்டிவேர் பயிரிடும் நிலத்தில் நேற்று களப்பயிற்சி மேற்கொண்டனர்.
இதில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் வெட்டிவேர் சாகுபடி செய்வது, அதன் பயன்கள், பயிரிடுவதன் மூலம், எப்படி மண் அரிப்பை தடுப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். வேளாண் மாணவிகள் பிரித்திகா, பூஜாஸ்ரீ, பிரவீனா, பிரியதர்ஷினி, பிரியங்கா, ரம்யாகிருஷ்ணன், ரீனாஸ்ரீ, சப்திகா, விவசாயிகள் ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், பாலகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
