/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு நாளை முதல் பயிற்சி
/
வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு நாளை முதல் பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு நாளை முதல் பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு நாளை முதல் பயிற்சி
ADDED : அக் 06, 2025 01:57 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத பயிற்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நல்லுார் வட்டாரம், ஐவதுகுடியில், நாளை (8ம் தேதி) ஸ்பைருலினா மற்றும் கடல்பாசி தயாரிக்கும் முறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். 9ம் தேதி வண்டுவராயன்பட்டு விவசாயிகளுக்கு நெற்பயிரில் களை மற்றும் நீர் மேலாண்மை பயிற்சி நடக்கிறது .
11ம் தேதி வடமூரில் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் விதை உற்பத்தி, 15ம் தேதி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளாணில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி; வேப்பூர் அடுத்த இளங்கியனுாரில் மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை பயிற்சி நடக்கிறது.
16ம் தேதி இடகொண்டான்பட்டு விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் விதை உற்பத்தி பயிற்சி, 17ம் தேதி ஆலந்துறைப்பட்டில், உள்நாட்டு கூட்டின மீன் வளர்ப்பு மற்றும் தீவன மேலாண்மை பயிற்சி, 22ம் தேதி பூதங்குடியில் கரும்பு சோகை மட்க வைத்தல் பயிற்சி, 23ம் தேதி முதனை கிராமத்தில் அங்கக எரு மற்றும் மண்வள மேலாண்மை பயிற்சி, கட்டமுத்துபாளையத்தில் நிலக்கடலையில் விதை நேர்த்தி பயிற்சி நடக்கிறது.
24ம் தேதி வெய்யலுாரில் உளுந்து மற்றும் பாசிப்பயிறுக்கேற்ற உயர் உழவியல் தொழில்நுட்பங்கள் பயிற்சி, லால்பேட்டையில் உள்நாட்டு கூட்டின மீன் வளர்ப்பு, பரங்கிப்பேட்டையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் உள்நாட்டு கூட்டின மீன் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடக்கிறது.
28ம் தேதி விருத்தாசலம் அடுத்த சத்தியவாடியில் பாலில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி நடக்கிறது. எனவே, அந்தந்த பகுதி விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்று பயனடைலாம்.