/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மண்புழு உரம் தயாரிப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
/
மண்புழு உரம் தயாரிப்பு விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 30, 2025 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கம்மாபுரம் அடுத்த பெருந்துறை கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு மண்புழு உரம் உற்பத்தி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணை வேளாண் இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் காயத்திரி ஆகியோர் விவசாயிகளுக்கு மண்புழு உர உற்பத்தி செய்வதற்கான செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தனர். உதவி வேளாண் அலுவலர் ராஜிவ்காந்தி, ரமேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், பஞ்சமூர்த்தி மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.