ADDED : மார் 04, 2026 05:00 AM

விருத்தாசலம்: பலாவில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்த பயிற்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்து, பலா சாகுபடி, அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விரிவாக்க துறைத்தலைவர் செந்தில்குமார், பலாவிற்கு மண்ணின் வளம், சாகுபடி குறிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
பேராசிரியர் கண்ணன் பலாக்கொட்டைமாவு, பலாபூ, பலாக்கூழ், பலா வற்றல், பலா சிப்ஸ், உலர்ந்த கொட்டை, பலா உப்பு சக்கை, பலா முறுக்கு, பலா அல்வா, பலா ஜாம் போன்ற பொருட்கள் குறித்து பேசினார்.
ஓய்வு பெற்ற இணை இயக்குனர் ஹரிதாஸ், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பலா தாய் மர பண்ணை அமைக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தார்.
பேராசிரியர்கள் சத்யநாராயணன், ஜெய்வேலு, ஜெயக்குமார், கலைச்செல்வி ஆகியோர் சாகுபடி குறித்து பேசினர். மாவட்டத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
