ADDED : ஜூன் 25, 2026 05:35 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் கிராம விவசாயிகளுக்கு, விளைநிலம் காப்போம் பயிற்சி முகாம் நடந்தது.
கம்மாபுரம் வட்டார வேளாண்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சுஜிவேல் மண் பரிசோதனை, இயற்கை உரம், தொழில்நுட்பம், பூச்சி நோய் தாக்குதல் குறித்து பயிற்சி அளித்தார். இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி வேளாண் அலுவலர்கள் ராஜிவ்காந்தி, ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.
