ADDED : ஜூலை 09, 2026 03:51 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அம்புஜவல்லிப்பேட்டை கிராமத்தில் நெல் விதை உற்பத்தி மற்றும் மேலாண்மை தொழில் நுட்பம் குறித்த வெளிவளாக பயிற்சி முகாம் நடந்தது.
முகாமை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி நடராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில் நெல்லின் புதிய ரகங்கள், விதை உற்பத்தி, நீல பச்சை பாசியின் பயன்பாடு, நாற்றாங்கால் மேலாண்மை, குறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், மண் வளம், ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை மற்றும் நுண்ணுாட்டச்சத்து கலவையின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
