/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காவல்படை மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தில் பயிற்சி
/
காவல்படை மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தில் பயிற்சி
ADDED : டிச 24, 2024 07:43 AM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் காவல் படையில் 50 மாணவிகள் உள்ளனர். இவர்கள் போலீசார் மாதிரி சீருடை அணிந்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நடக்கும் பணிகள் பற்றி தெரிந்து கொள்ள வந்தனர்.
அவர்களுக்கு, போலீசாரின் பணிகள் பற்றி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தார். பாதிக்கபட்டவர்களிடம் புகாரை பெற்று வழக்கு பதிவது, குற்றவாளிகளை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது பற்றி விளக்கினார். போலீஸ் நிலையத்தில் கைதிகள் அறை, போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள் குறித்து விவரங்களை மாணவிகள் அறிந்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன், ஆசிரியர்கள் சாந்தி, துரை, லட்சுமி, கார்த்திகேயன் உடனிருந்தனர்.