தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அலுவலர்களுக்கு பயிற்சி

 அலுவலர்களுக்கு பயிற்சி

 அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : மார் 19, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது.

ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ், தாசில்தார் பிரகாஷ், தேர்தல் துணை தாசில்தார் குமாரகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கணினி உதவியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில், 317 ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; மையங்களில் அடிப்படை வசதிகள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை குறித்து முன்கூட்டியே பரிசோதனை செய்ய வேண்டும்; ஓட்டுப்பதிவு நாளில் அரசியல் கட்சிகளின் பூத் ஏெஜன்டுகள் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்; என தெரிவிக்கப்பட்டது

மேலும், ஓட்டுப்பதிவு நாளன்று மின்னணு இயந்திரங்கள், விவி பாட்., சாதனங்களை எடுத்து சென்று, ஓட்டுப்பதிவு முடிந்ததும் அவற்றை பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையத்தில் சேர்ப்பது வரை, விழிப்புடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us