மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி
UPDATED : ஆக 04, 2026 11:13 PM
ADDED : ஆக 04, 2026 10:43 PM
மந்தாரக்குப்பம்:மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை சுகாதாரமாக பராமரிப்பது குறித்து கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள டேங்க் ஆபரேட்டர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.
வடக்கு சேப்ளாநத்தம் மற்றும் இருப்பு ஊராட்சி அலுவலகங்களில் நடந்த பயிற்சி முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிவர்மா தலைமை தாங்கினார். துணை பி.டி.ஒ.,க்கள் மாயவன் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ரத்தினசபாபதி, சிவா, ரகுநாத், அர்னால்டு ஜான்சன், சூர்யபிரகாஷ், தமிழ்வாணன், அவினாஷ் முன்னிலை வகித்தனர்.
முகாமில், மழைக்காலத்தில் குடிநீர் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டிய நடைமுறைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக பராமரிக்கும் வழிமுறைகள், குடிநீரில் குளோரின் கலக்கும் சரியான அளவு மற்றும் அதன் முக்கியத்துவம், குளோரின் எஞ்சிய அளவை பரிசோதிக்கும் முறை, நீர்த்தேக்கத் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் குடிநீர் குழாய்களில் கலக்காமல் தடுப்பது, குடிநீர் விநியோகக் குழாய்களில் ஏற்படும் உடைப்புகள் மற்றும் கசிவுகளை உடனடியாக கண்டறிந்து சரிசெய்வது, குடிநீர் மூலம் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு உள்ளிட்ட தொற்று நோய்களைத் தடுப்பதில் ஆபரேட்டர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில், ஊராட்சி செயலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.
