ADDED : ஏப் 09, 2026 05:18 PM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பயிற்சியில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வி.வி., பேட் இயந்திரங்கள் கையாள்வது, ஓட்டுச்சாவடி நடைமுறைகள், ஓட்டு போட வருபவர்களின் ஆவணங்களை சரி பார்ப்பது உள்ளிட்ட தேர்தல் தினத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, குறிஞ்சிப்பாடி தொகுதியின் தேர்தல் நடத்தும் குழுவினர் விளக்கினர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி, தாசில்தார் விஜய் ஆனந்த், தொகுதியின் தேர்தல் நடத்தும் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
