/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகள் பயிற்சி
/
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகள் பயிற்சி
ADDED : செப் 28, 2024 06:35 AM

நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு அடுத்த அரசடிக்குப்பத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை, வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், 'விவசாயத்தில் தொடர்ந்து கூடுதல் வருமான பெற விவசாயத்தோடு ஆடு, மாடு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெறலாம். ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் பயிர் சாகுபடியுடன் கறவை மாடு, ஆடு, கோழி வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு, மண் புழு உரம் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித்தோட்டம் போன்ற வேளாண் தொடர்பான பணிகளை மேற்கொள்ள விவசாயிகளிடம் கேட்டு கொண்டார்.
நிகழ்ச்சியில் வேளாண்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் ஜானகிராமன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரேஷ், வட்டார வேளாண் அலுவலர் ஜெயஸ்ரீ, பொன்னிவளவன், உதவி வேளாண் அலுவலர்கள் சங்கரதாஸ், விஜயகுமார், ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி, உதவி தொழில்நுட்ப அலுவலர் தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.