தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பல்கலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2027  இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி 

பல்கலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2027  இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி 

பல்கலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2027  இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி 


UPDATED : ஜூலை 26, 2026 09:05 PM

ADDED : ஜூலை 26, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 09:05 PM ADDED : ஜூலை 26, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலை பல்கலைகழகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆன்லைன் மூலம் சுய கணக்கெடுப்பு படிவம் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத்தில், மாணவ, மாணவிகளுக்கு, மக்கள் தொகை கணெக்கெடுப்பு, 2027, ஆன்லைன் மூலம் சுய கணக்கீட்டு படிவம் பதிவு செய்வது குறித்த பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவ, மாணவிகள் அவரவர் செல்போன் மூலம், ஆன்லைன் மூலம் இணையத்தில், சுய கணக்கீடு படிவம் பதிவு செய்ய வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பல்கலைகழக டி.ஆர்.ஒ., ஜெகதீஷ்வரன் தலைமை தாங்கினார். தாசில்தார் சதீஷ் வரவற்றார்.

அண்ணாமலை பல்கலைகழக பதிவாளர் சிங்காரவேல், துணை வேந்தர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அறிவுடை நம்பி ஆகியோர் பங்கேற்று பேசினர். மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் ேஹமசுந்தரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

நிகழ்வில், தேர்தல் பரிவு துணை தாசில்தார் ஆனந்தி, அண்ணாமைல நகர் பேரூராட்சி வருவாய் ஆய்வாளர் துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அண்ணாமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஷாகுல்ஹமீது நன்றி கூறினார். தொடர்ந்து பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us