ADDED : ஏப் 26, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் பெண்ணாடத்தில் ரூ. 3.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.
பெண்ணாடம் துணைமின் நிலையம், மாளிகைக்கோட்டம் பீடரில் குறைந்த மின்னழுத்தம், அதிக மின்பளு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மாளிகைக்கோட்டம் பீடர், வள்ளலார் அறநிலையம் பகுதியில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 790 ரூபாய் மதிப்பில் 25 கே.வி.ஏ., திறனுடைய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
இது மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டது. பெண்ணாடம் உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி, நகர உதவி பொறியாளர் வெங்கடேசன், மின்வாரிய பணியாளர்கள் உடனிருந்தனர்.