/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு குடியிருப்பில் வீடு; திருநங்கைகள் மனு
/
அரசு குடியிருப்பில் வீடு; திருநங்கைகள் மனு
ADDED : ஆக 18, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; பண்ருட்டியில் அரசு சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டுமென, திருநங்கைகள் மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், திருநங்கைகள் அளித்த மனு:
பண்ருட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டின் உரிமையாளர்கள், வீடுகளை காலி செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். வேறு இடத்திலும் வீடுகள் கிடைக்காததால், தங்குவதற்கு இடமின்றி சிரமப்படுகிறோம்.
எனவே, பண்ருட்டி இருளர் பகுதியில் அரசு சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு வழங்க வேண்டும்.