/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டுமனை பட்டா கேட்டு திருநங்கைகள் மனு
/
வீட்டுமனை பட்டா கேட்டு திருநங்கைகள் மனு
ADDED : ஜன 06, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; வீட்டுமனை பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு கொடுத்தனர்.
கடலுார் அடுத்த செல்லங்குப்பத்தை சேர்ந்த திருநங்கைகள் கொடுத்துள்ள மனு;
நாங்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு வாடகை வீடும் கிடைக்கவில்லை. வேலையும் தர மறுக்கிறார்கள். சொந்த வீட்டிலும் சேர்க்க மறுக்கின்றனர். எங்கள் வாழ்வாதார நலன் கருதி எங்களுக்கு வீட்டுமனை பட்டா அல்லது தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.