/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு
/
மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு
ADDED : நவ 27, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து கடலுார் அடுத்த அன்னவல்லி கிராமத்தைச் சேர்ந்த மோகனநாயகி தலைமையில் திருநங்கைகள் அளித்த மனு:
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். திருநங்கை என்பதால் யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை. குடியிருப்பதற்கு வீடு இல்லாமல் அவதிப்படுகிறோம். இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மனுவை பரிசீலனை செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.

