/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு 16ம் தேதி உள்ளிருப்பு போராட்டம்
/
போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு 16ம் தேதி உள்ளிருப்பு போராட்டம்
போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு 16ம் தேதி உள்ளிருப்பு போராட்டம்
போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு 16ம் தேதி உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 28, 2024 07:03 AM

கடலுார், : தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில், வரும் 16ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக, சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.
கடலுாரில் அவர் கூறியதாவது;
வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிட, பதவி உயர்வு பட்டியலில் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் அமைச்சு பணி பிரிவினர்களுக்கும், ஒருங்கிணைந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் திட்டத்தில், அமைச்சு பணியாளர்களின் பதவி உயர்வு பாதிக்கும் சூழ்நிலை உருவாக்கப்படுவதாக தெரிகிறது.
இது தொடர்பாக அக்., முதல் வாரத்தில் டில்லியில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சங்கம் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.