ADDED : மார் 04, 2026 04:59 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஏ. ஆண்டிகுப்பத்தில் உள்ள முந்திரி தோப்பில் ஆண் மயில் ஒன்று பறந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் மயங்கிய நிலையில் இருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் நாய்களை விரட்டி விட்டு மயக்க நிலையில் இருந்த அந்த மயிலை மீட்டு பண்ருட்டி தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, பின் பண்ருட்டி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
