ADDED : டிச 30, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த ஆதிவராகநல்லுார் கிராமத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் துவக்க விழா நடந்தது.
ஆதிவராகநல்லுார் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., நித்தியஸ்ரீ மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
வேளாண் கல்லுாரி மாணவிகள் வேளாண் செயல் திட்டங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.
விவசாயிகள் தமிழ்வாணன், கோவிந்தன், கணேசன், செந்தில் ராஜா, சுதாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

