ADDED : செப் 11, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
கடலுார்: முன்னாள் படைவீரர்கள் நலச்சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கடலுார் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்த விழாவில், சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தார். விழாவில், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரேணுகாதேவி, நிர்வாக அதிகாரி கமலக்கண்ணன், தலைமை பயிற்சி ஆசிரியர் சித்ரா, சங்க துணைத் தலைவர் ஜெயராமன், செயலாளர் இளவரசன், பொருளாளர் சுப்பு, இணை செயலாளர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
