ADDED : ஏப் 26, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : காஷ்மீரில் தீவீரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், புஷ்பாஞ்சலி நடந்தது.
சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்த நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி, மாவட்டத் துணைத் தலைவர் நாராயணன், பா.ஜ., மாநில பொறுப்பாளர் ஸ்ரீதரன், ராகேஷ், விஸ்வநாதன், ரகுபதி, மகளிரணி அர்ச்சனா ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.