ADDED : மார் 03, 2024 05:33 AM
சிதம்பரம்: சிதம்பரம் அருகே சோழன் எக்ஸ்பிரஸில் படியில் பயணம் செய்த வாலிபர், படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மதுரை, மேலூர் திருமால் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் தேவநாத், 23; இவர், நேற்று சென்னையில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி சென்று கொண்டிருந் தார்.
ரயில் படிகட்டில் அமர்ந்து, கால்களை வெளியில் தொங்கவிட்டபடி பயணித்ததாக கூறப்படுகிறது.
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை நேற்று மதியம் ரயில் கடந்தபோது, அங்கு பிளாட்பாரம் உயர்த்தும் பணி நடந்துவரும் நிலையில், படியில் பயணித்த தேவநாத் கால்கள், உயர்த்தி கட்டப்பட்ட பிளாட்பாமில், இடித்து, பலத்த காயமடைந்தது.
சிதம்பரம் ரயில் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண், 108 ஆம்புலன்சை வரவழைத்து, காய மடைந்த தேவநாத்தை, சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
