தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் த.வெ.க.,  நிர்வாகிக்கு கத்திவெட்டு 

 கடலுாரில் த.வெ.க.,  நிர்வாகிக்கு கத்திவெட்டு 

 கடலுாரில் த.வெ.க.,  நிர்வாகிக்கு கத்திவெட்டு 


ADDED : ஜன 14, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், துறைமுகம் சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் வெற்றிவேல், 41; தமிழக வெற்றிக் கழகத்தில் துறைமுகம் பகுதி செயலாளர். இவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிங்காரத்தோப்பு உப்பனாற்று பாலம் அருகில் கரும்பு விற்பனை செய்து வந்தார்.

நேற்றிரவு 10:00 மணிக்கு அவர் கடையில் இருந்தபோது, அங்கு வந்த முதுநகர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், வெற்றிவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும், வெற்றிவேலை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், இடது தாடையில் பலத்த காயமடைந்த வெற்றிவேல் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்த தமிழக வெற்றி கழகத்தின் 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. புதுநகர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக கடலுார், துறைமுகம் போலீசார், வெற்றிவேலை கத்தியால் வெட்டிய இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us