/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்: டிரைவர் கைது
/
கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்: டிரைவர் கைது
ADDED : ஏப் 19, 2025 06:34 AM
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து, டிரைவரை கைது செய்தனர்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பாலக்கொல்லை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த, (டி.என்.76 - எஸ்.4786) என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், நடியப்பட்டு பகுதியில் இருந்து அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆலடி போலீசார் நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராஜீவ்காந்தி, 36; லாரி உரிமையாளர் கோவிந்தராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, டிரைவர் ராஜீவ்காந்தியை கைது செய்தனர்.