/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் மீது லாரி மோதல்: தம்பதி உயிர் தப்பினர்
/
கார் மீது லாரி மோதல்: தம்பதி உயிர் தப்பினர்
ADDED : பிப் 15, 2024 11:33 PM

கடலுார் : கடலுாரில் கார் மீது லாரி மோதியதில், தம்பதி காயத்துடன் உயிர் தப்பினர்.
புவனகிரியை சேர்ந்தவர் சரவணன், 72; இவரது மனைவி சுலோச்சனா, 69; இருவரும் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புவனகிரியில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று காலை காரில் வந்தனர். காரை சரவணன் ஓட்டினார். கடலுார் செல்லங்குப்பம் அருகில் கார் வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பிய தம்பதியினரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக கடலுார்-சிதம்பரம் சாலையில், 7:30 மணி முதல், 7:45 மணி 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.