ADDED : அக் 25, 2026 04:56 PM

அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: அரசு அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சத்திரம் போலீசார் புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே, இன்று (அக்.,25) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். லாரியை சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதுகுறித்து புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தார்.
