/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலங்கலாக வரும் குடிநீர்; நெல்லிக்குப்பத்தில் அச்சம்
/
கலங்கலாக வரும் குடிநீர்; நெல்லிக்குப்பத்தில் அச்சம்
கலங்கலாக வரும் குடிநீர்; நெல்லிக்குப்பத்தில் அச்சம்
கலங்கலாக வரும் குடிநீர்; நெல்லிக்குப்பத்தில் அச்சம்
ADDED : ஜன 12, 2025 10:26 PM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் வழங்கும் குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் காலை,மாலை இரண்டு வேளைகளில் மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வழங்குகின்றனர்.இதனால் நகராட்சி மூலம் வழங்கும் குடிநீரையே மக்கள் நம்பியுள்ளனர்.இந்நிலையில் நேற்று வழங்கிய குடிநீர் கந்தசாமி தெரு,ராஜீவ்காந்தி நகர் உட்பட பல இடங்களில் கலங்கலாக வந்தது.குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டதால் , அந்த குடிநீரை பயன்படுத்தவில்லை.
இதனால் மக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.குடிநீர் கலங்கலாக வருவதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். அதுவரை நகராட்சியில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.