ADDED : ஏப் 07, 2026 09:53 PM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில், த.வா.க., சார்பில், கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்ணன் போட்டியிடுகிறார். இவர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தொகுதி தலைவர் அய்யப்பன், செயலாளர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி நகர செயலர் முருகாநந்தம், மாநில நிர்வாகி குமரவேல், வடலுார் நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் அரிபுத்திரன், பாலமுருகன், தயாநிதி, கருணமணி, சுப்பரமணியன், தனகோடி மற்றும் தொகுதி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
