ADDED : ஏப் 15, 2026 10:49 PM

அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி சுற்று வட்டார பகுதிகளில், த.வா.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் த.வா.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணன், கேமரா சின்னத்திற்கு, குள்ளஞ்சாவடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் குறிஞ்சிப்பாடி தொகுதி செயலாளர் வெங்கடேசன், தலைவர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் வீர பாலமுருகன், ஒன்றிய தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய பொருளாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய வழக்கறிஞர் அணி செயலாளர் சத்திய நாராயணன், நிர்வாகிகள் பாக்கியராஜ், வீரமணிகண்டன், பிரபு, ராமையன், நாராயணசாமி, குணசேகர் உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
