ADDED : ஏப் 08, 2026 04:42 PM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் த.வா.க., வேட்பாளர் கண்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் கண்ணன் போட்டியிடுகிறார். இவர், குறிஞ்சிப்பாடி பகுதியில், 'கேமரா' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து ஆதரவு திரட்டினார்.
வேட்பாளர் கண்ணன் மனைவி சுபலட்சுமி, தொகுதி தலைவர் அய்யப்பன், செயலாளர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் முருகானந்தம், மாநில நிர்வாகி குமரவேல், வடலுார் நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் அரிபுத்திரன், பாலமுருகன், தயாநிதி, சுப்பரமணியன், தனகோடி மற்றும் தொகுதி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
