ADDED : மார் 21, 2026 04:26 AM
விருத்தாசலம்: பெண்ணை, திட்டி தாக்கிய நால்வர் மீது வழக்குப் பதிந்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி கீதா, 43; இவர் நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரது வீட்டின் வெளியில் குடி போதையில் நின்று கொண்டிருந்த, விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்த சத்தி யமூர்த்தி, கார்மாங்குடி வடக்கு தெருவை சேர்ந்த ஜெயசூர்யா உள்ளிட்ட நால்வர், அசிங்கமாக திட் டி கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த கீதா, அவர்களிடம் யாரை திட்டுகிறீர்கள் என கேட்டார். இதில், ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, ஜெயசூர்யா உள்ளிட்ட நால்வரும், கீதாவை அசிங்கமாக திட்டி தாக்கினர். இதில், காயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சத்தியமூர்த்தி, ஜெயசூர்யா உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து, சத்தியமூர்த்தி, ஜெயசூர்யாவை கைது செய்தனர்.
