தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஹான்ஸ் கடத்திய இருவர் கைது   

 ஹான்ஸ் கடத்திய இருவர் கைது   

 ஹான்ஸ் கடத்திய இருவர் கைது   


ADDED : மார் 24, 2026 04:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 04:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: கீரப்பாளையம் வழியாக பைக்கில் ஹான்ஸ் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரியான ஜெயக்குமாரி தலைமையிலான குழு நேற்று முன் தினம் மாலை, கீரப்பாளையம் கடைவீதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் வேகமாக வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட, 20 ஹான்ஸ் பண்டல்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரிய வந்தது.

இருவரையும் விசாரித்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கேசவேல் மகன் சரேஷ்குமார்,23; மற்றும் புதுச்சேரி, கோவிந்துசாலை முருகன் மகன் விக்னேஷ்,28; என்பது தெரிய வந்தது. பறிமுதல் செய்த பொருட்களை தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணியிடம் ஒப்படைத்தனர்.

அப்போது தாசில்தார் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us