ADDED : ஜூலை 02, 2026 03:13 AM

அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி போலீஸ் எஸ்.ஐ., ராஜாங்கம் மற்றும் போலீஸ் குழுவினர் நேற்று, சுப்ரமணியபுரம், தங்களிக்குப்பம் பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அங்கு சிலர், மதுபாட்டில் விற்றது போலீசருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, மதுபாட்டில் விற்ற சுப்ரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ஞானசேகர், 43; தங்களிக்குப்பம் பகுதியை சேர்ந்த சுதர்சன், 46; ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 11 மது பாட்டில்கள் மற்றும், 500 ரூபாய்
ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
