ADDED : ஜூன் 06, 2026 08:50 AM
அ நிறம் | அளவு
கடலுார்: ரெட்டிச்சாவடி அருகே கஞ்சா விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெட்டிச்சாவடி சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், நேரில் சென்று புதுக்கடை புதிய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சிங்கிரிகுடியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் ராகுல்,23, மற்றும் விழுப்புரம் மாவட்டம், பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேது மகன் காலா என்கிற விஜய்,29, ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ரெட்டிச்சாவடி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
