ADDED : ஜூலை 05, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்கவரப்பட்டு சுடுகாட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக பண்ருட்டி கலால் போலீசாருக்கு தகவல் கடைத்தது.
கலால் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை செய்தனர்.அங்கு சந்தேகபடும்படி நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர்.விசாரனையில் நெல்லிக்குப்பம் அடுத்த நத்தத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் தினேஷ்பாபு,23; சங்கர் மகன் சக்திவேல்,21; என தெரிந்தது.
பண்ருட்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
