ADDED : ஆக 29, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி பகுதியில் குட்கா விற்ற கடைக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், நேற்று காலை கல்குணம் பகுதியில் ரோந்து சென்று, சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ் போன்ற குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. கடை உரிமையாளர்களான அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபிநாதன், 40, தன்சிங்கு மகன் வெற்றிவேல், 49; இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
