ADDED : செப் 25, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் பொட்டா, ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, கோணாங்குப்பம் மற்றும் வலசை கிராமங்களில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனை செய்வது தெரிந்தது.
இது தொடர்பாக, கோமங்கலம் சேகர் மகன் பார்த்தசாரதி, 21, வலசை காலனி சின்னக்கண்ணு மகன் சேகர், 48, ஆகியோரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பார்த்தசாரதி, சேகர் ஆகியோரை கைது செய்தனர்.