/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் அருகே 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
/
விருத்தாசலம் அருகே 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
விருத்தாசலம் அருகே 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
விருத்தாசலம் அருகே 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
ADDED : ஜன 23, 2025 07:57 AM
கடலுார்; விருத்தாசலம் அருகே சரக்கு வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில், மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், 10 சாக்கு மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த முகமது ஹரிஸ், 32; விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டுரை சேர்ந்த பிரகாஷ், 31; என்பதும் தெரியவந்தது. இவர்கள் புதுக்கூரைப்பேட்டை, பெரியார் நகர் பகுதியில் குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி, திருச்சியில் உள்ள மாட்டு பண்ணைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, முகமது ஹரிஸ், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, சரக்கு வாகன மற்றும் 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.