ADDED : ஜன 21, 2026 06:40 AM
நடுவீரப்பட்டு: கடை எதிரில் நின்றதை தட்டி கேட்டவரை கத்தியால் குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,47; இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பழனியின் கடைக்கு சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் ரஞ்சித்குமார்,22; செந்தில்குமார் மகன் பரத்,22; இருவரும் கடையின் எதிரில் பேசிக் கொண்டிருந்தனர். இதை பழனியின் மகன் சசிக்குமார்,மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் தட்டி கேட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், பரத் இருவரும் ஆறுமுகத்தை கத்தியால் குத்தினர். இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி-கடலுார் சாலையில் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சித்குமார், பரத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

