/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் 52 சவரன் நகை பறித்த இருவர் சிக்கினர் நகைக்கடை பெண் ஊழியர் 'ரூட்' போட்டுக் கொடுத்தது அம்பலம்

ADDED : டிச 01, 2024 07:10 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பஸ்சில் 52 சவரன் நகைகளை பறித்துச் சென்ற சம்பவத்தில், நகை கடையில் பணிபுரிந்த பெண் ஊழியரின் சதித்திட்டம் அம்பலமானது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் போலீசில் சிக்கினர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ராஜவேல் வீதி காய்கறி மார்க்கெட் எதிரே செந்தில் ஜுவல்லரி உள்ளது.
அங்கு பணிபுரியும் ஜான்பால், 45, என்பவர், கடந்த 28ம் தேதி கடையிலிருந்து 52 சவரன் தங்க நகைகளை பெண்ணாடத்தில் உள்ள ஹால்மார்க் சென்டரில் சீல் போட எடுத்துச் சென்றார்.
சீல் போட்ட நகைகளுடன் பெண்ணாடத்தில் இருந்து அரசு பஸ்சில் வந்தபோது, கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர் நகைப்பையை பறித்து இறங்கி ஓடினார். அவருடன் பயணித்த மற்றொரு நபரும் பஸ்சிலிருந்து இறங்கி ஓடி, தயாராக நின்றிருந்த மற்றொரு நபருடன் பைக்கில் தப்பினர்.
புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்தனர். குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், குணபாலன், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, பாக்யராஜ், சங்கர் மற்றும் உட்கோட்ட குற்ற தடுப்புப்பிரிவு போலீசார் அடங்கிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி., பதிவுகள், மொபைல் போன் அழைப்புகள் ஆகியவற்றை விசாரித்தனர். அதில், நகை கடையில் பணிபுரிந்து வரும் ஒரு பெண் ஊழியரின் சதித்திட்டம் அம்பலமானது. அவரது ஆலோசனைபடி, பெண்ணாடத்தில் ஹால்மார்க் சீல் போட நகைகளை எடுத்து வருவதும், சீல் போட்டு எடுத்து வரும்போது நகைகளை பறிக்க வேண்டும் என்ற யோசனை கூறியதும் தெரிந்தது.
அதன்படி, நகை கடை பெண் ஊழியர் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து 47 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.