ADDED : மார் 30, 2026 06:57 PM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் பைக்கில் மணல் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளாறு கட்டுக்கரை பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, 2 வாலிபர்கள் மணல் திருடி பைக்கில் மூட்டை கட்டி கடத்தி வரும்போது பிடிப்பட்டனர். விசாரணையில், சேத்தியாத்தோப்பு கட்டுக்கரையை சேர்ந்த வரதராஜன் மகன் வாஞ்சிநாதன், 27; மேட்டுத்தெருவைச் சேர்ந்த ராயர் மகன் செல்வம், 36; தெரியவந்தது. இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
