/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருமகனுக்கு கொலை மிரட்டல் மாமனார் உட்பட இருவர் கைது
/
மருமகனுக்கு கொலை மிரட்டல் மாமனார் உட்பட இருவர் கைது
மருமகனுக்கு கொலை மிரட்டல் மாமனார் உட்பட இருவர் கைது
மருமகனுக்கு கொலை மிரட்டல் மாமனார் உட்பட இருவர் கைது
ADDED : செப் 21, 2024 06:21 AM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த எம்.பரூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பஞ்சமூர்த்தி மகன் தினேஷ், 24. இவர், நேற்று முன்தினம் தனது மனைவி ஆரோக்கியலின்சியை பார்க்க அதேபகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, மாமனார் அந்தோணிராஜிற்கும், தினேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், அந்தோணி ராஜ், 47; இவரது மகன் ஆல்வின் சுசி, மனைவி வின்னரசி, தினேஷ் மனைவி ஆரோக்கியலின்சி ஆகியோர் சேர்ந்து தினேஷை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் அந்தோணிராஜ், ஆல்வின் சுசி, வின்னரசி உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து, அந்தோணிராஜ், ஆல்வின் சுசி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.