தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்விரோத தகராறு இருவர் கைது

 முன்விரோத தகராறு இருவர் கைது

 முன்விரோத தகராறு இருவர் கைது


ADDED : பிப் 16, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: இருதரப்பினர் தாக்கிக்கொண்டதில், 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்தனர்.

பெண்ணாடம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி கீர்த்தனா, உறவினர் கார்த்திக், 32; ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன், பெண்ணாடம், புதிய பஸ் நிலையம் வந்தனர்.

அதே பஸ்சில், அதே பகுதியை சேர்ந்த செல்லதுரை, 41; அவரது மனைவி அம்சவல்லியும் வந்து இறங்கினர்.

புதிய பஸ் நிலையத்தில் இறங்கிய போது ஜீவா, செல்லதுரை இருவருக்கும் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு நின்றிருந்த இருவரது உறவினர்களான கார்த்தி, ராஜவேல், திலீபன் ஆகியோர் ஒருவரைக்கொருவர் திட்டி, தாக்கிக் கொண்டனர்.

இருவரையும் அருகிலுள்ளவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருதரப்பு புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் ஜீவா, செல்லதுரை, உட்பட 8 பேர் மீது தனித்தனியே வழக்குப் பதிந்து, செல்லதுரை, கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us